டாடா மோட்டார்ஸின் JLRக்கு புதிய விடியல் பிறந்த கதை தெரியுமா?

Estimated read time 1 min read

டாடா மோட்டார்ஸ் இப்போது இந்தியாவில் மிகவும் மதிப்புமிக்க கார் தயாரிப்பாளராக உள்ளது!

ஆம், கடந்த ஒரு மாதத்தில் அதன் பங்கு விலையில் ஏறக்குறைய 20% உயர்வுக்கு பிறகு இந்நிறுவனம் மாருதி சுஸுகியிடம் இருந்து கிரீடத்தை பறித்துள்ளது. பயணிகள் வாகனங்களில் மாருதி 40% சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது, டாடா மோட்டார்ஸ் வெறும் 15% மட்டுமே கொண்டுள்ளது. இருப்பினும், முதலீட்டாளர்கள் மத்தியில், டாடா மோட்டார்ஸ் மீது ஒரு மிகப்பெரிய உற்சாகம் இருக்கிறது.

நீங்கள் பெரும்பாலானவர்களிடம் ஏனென்று கேட்டால், டாடாவின் அற்புதமான புதிய மாடல்கள் -Punch, Nexon, Harrier மற்றும் பலவற்றால் தான் என்று கூறுவார்கள். அல்லது டாடா போல் எலெக்ட்ரிக் வாகனங்களை (EV) யாரும் செய்யாததால் தான் என்று அவர்கள் உங்களுக்குச் சொல்வார்கள்.

ஆனால் வேறு காரணம் இருப்பதாக நாங்கள் சொன்னால் ஏற்பீர்களா? ஒரு பிரிட்டிஷ் காரணம். நாங்கள் ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover) பற்றி பேசுகிறோம்.

ஆம், டாடா மோட்டார்ஸின் வருவாயில் கிட்டத்தட்ட 70 சதவீதம் JLR-ன் பங்குதான். மற்றும் அவர்களின் கார்கள் இறுதியாக டாடாவில், இலாப கணக்கில் சேர்ந்துள்ளது.

ஏன் இவ்வாறு சொல்கிறோம் என்று நீங்கள் கேட்கலாம்.. சற்று பின்னோக்கி சென்று செய்திகளை புரட்டி பார்த்தால், 2018 முதல் பொதுவான ஒரு தலைப்புச் செய்தியைக் காண்பீர்கள் — டாடா மோட்டார்ஸ் ‘நஷ்டத்தை ஏற்படுத்தும் பிரிட்டிஷ் துணை நிறுவனத்தை (JLR)’ அகற்ற போவதாக இருக்கும்.

அப்படியானால், JLR எப்படி எல்லாவற்றையும் மாற்றியது என்பதை உங்களுக்கு இங்கு விவரிக்கிறோம்.

டாடா மோட்டார்ஸ் JLRஐ கையகப்படுத்தியது

2008 இல், நிதி நெருக்கடி உலகைத் தாக்கியது. ஒரு பொருளாதார மந்தநிலை பெரியதாக இருந்தது மற்றும் நிறுவனங்கள் அதை சமாளிக்க போராடி வந்தன. இங்கிலாந்தில், JLR அதன் கடைசிக் கட்டத்தில் இழுத்து மூடும் தருவாயில் இருந்தது. அப்போதுதான் டாடா மோட்டார்ஸ் ஒரு வாய்ப்பைப் பார்த்தது. முந்தைய ஆண்டுகளில் JLR சரியாக விற்பனை ஆகாவிட்டாலும், டீலர்கள் அதன் மீது வைத்திருந்த நம்பிக்கையை டாடா மோட்டார்ஸ் நன்கு கண்டறிந்தனர்.

டாடா மோட்டார்ஸ் கடன்கள் மூலம் பணத்தை குவித்து, ரொக்கமாக $2.3 பில்லியன் மதிப்பில் JLR பிராண்டை வாங்க ஒப்பந்தம் செய்தனர்.

இந்த முடிவால் முதலீட்டாளர்கள் மிகவும் மகிழ்ச்சியடையவில்லை, ஏனென்றால் உடனடியாக டாடா மோட்டார்ஸ் லாபத்திலிருந்து நஷ்டத்திற்குச் சென்றது. ஆனால் JLR-ஐ மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுவர டாடா உறுதியாக இருந்தது.

எனவே அவர்கள் தங்கள் முக்கியம் அல்லாத முதலீடுகளை விற்று பணமாக்கினர். JLR-ன் மறுபிரவேசத்திற்குப் பயன்படுத்தக்கூடிய பணத்தைத் திரட்ட அவர்கள் அதிக அளவு பங்குகளை விற்றனர். அவர்கள் நிறுவனத்தை இயக்குவதற்கு பிஎம்டபிள்யூ நிறுவனத்தில் பணியாற்றிய உயர் அதிகாரிகளை நியமித்தனர். டாடா அடுத்த 2 ஆண்டுகளில் JLR-ல் உள்ள பணியாளர்களை 27,000 ஊழியர்களில் இருந்து 16,000 ஆகக் குறைத்தது.

இவை அனைத்தும், சில உன்னதமான வணிக நகர்வுகள்.

பொருளாதார மந்தநிலைக்குப் பிறகு சந்தை உயர்ந்தபோது, ​​JLR அதைப் பயன்படுத்திக் கொள்ள தயாராக இருந்தது. அடுத்த சில வருடங்கள் நிறுவனத்திற்கு மிக சாதகமாக இருந்தன. விற்பனையும் பணப்புழக்கமும் உயர்ந்தது. மேலும் லாப வரம்புகளும் (Profit Margins) இரட்டை இலக்கங்களை எட்டியது.

சரி. எல்லாம் மிகவும் நன்றாக போன போது, அது எங்கே மீண்டும் தவறாகிவிட்டது, என்று கேட்கிறீர்களா?

மீண்டும் JLR சறுக்கியது எப்படி?

2016 இல் JLRக்கு தொடங்கிய வெளிப்புற சிக்கல்களைப் பற்றி காண்போம்.

முதலில், வோக்ஸ்வேகன் உமிழ்வு ஊழல் குற்றச்சாட்டு (Volkswagen Emission Scandal). தங்கள் டீசல் கார்கள் உண்மையில் எவ்வளவு மாசுவை ஏற்படுத்துகின்றன என்பது பற்றி ஜெர்மன் கார் தயாரிப்பாளர் வோக்ஸ்வேகன் பொய் சொன்னதாகத் தெரிகிறது. திடீரென்று, ஐரோப்பிய ஒன்றியம் (EU) விதிகளை கடுமையாக்க முடிவு செய்தது. இது டீசல் வகை கார்களுக்கு அதிக வரிகளை அறிமுகப்படுத்தியது. மேலும் JLR கிட்டத்தட்ட டீசல் கார்களை பிரத்தியேகமாக விற்பனை செய்ததால், இம்முடிவு நிறுவனத்திற்கு பெரும் அடியாக இருந்தது.

பிறகு வந்தது பிரெக்ஸிட் BREXIT! யூகே இனி ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை என்று முடிவெடுத்தது உங்களுக்குத் தெரியும்.

JLR ஒரு பிரிட்டிஷ் நிறுவனமாக இருந்து, மற்ற ஐரோப்பிய நாடுகளில் இருந்து நிறைய உதிரிபாகங்களை இறக்குமதி செய்தது. புதிய கட்டணங்கள் மற்றும் வர்த்தக தடைகள் ஒரு பிரச்சனையாக இருந்தன. மேலும், JLR இந்த சப்ளையர்களுக்கு நிறைய பணம் கொடுக்க வேண்டியிருந்தது. UK POUND காசு செயலிழந்தபோது, ​​ திடீரென்று அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான பணத்தை வெளியே கொடுக்க வேண்டியிருந்தது.

இது போதாது என, சில முட்டாள்தனங்களும் உட்புறமாக நடந்தேறின

உதாரணமாக, JLR நிர்வாகம் அதன் நல்ல காலங்களில், தொழிலை விரைவாக விரிவாக்கம் செய்ய முடிவு செய்தது. அதிக கார்களை உருவாக்கவும், அதிக தொழிற்சாலைகளை அமைக்கவும், அவர்கள் மற்றொரு பில்லியன் டாலர்களை செலவளித்தனர். அதில் ஒரு தொழிற்சாலை சீனாவில் நிறுவியது. உள்ளூர் உற்பத்தி மூலம் அதிக இறக்குமதி வரிகளை குறைக்கும் எண்ணத்தில் இது கட்டமைக்கப்பட்டது. ஆனால், joint venture வழியைத் தேர்ந்தெடுத்ததனால், பொருட்களின் தயாரிப்பு தரத்தை யாரும் கண்காணிக்கவில்லை. வாடிக்கையாளர் புகார்கள் மேன்மேலும் அதிகரித்தன. விரைவில், சீன வாடிக்கையாளர்கள் JLR காரை விரும்பவில்லை, அதனால் சீனா போன்ற முக்கிய சந்தையில் விற்பனை வேகமாக சரிந்தது.

மற்றொரு பிரச்சனை என்னவென்றால், JLR தங்கள் கார்களுக்கு பல ‘Platforms’-ஐ பயன்படுத்தியது. Platform என்பது ஒரு சாப்ட்வேர் அடிப்படைத் தளம் என வைத்துக் கொள்ளுங்கள். அதன் போட்டியாளர்கள் பல கார்களை உருவாக்க ஒரு Platform-ஐப் பயன்படுத்தத் தொடங்கிய போதும், JLR பல இயங்குதளங்களைப் பயன்படுத்தும் பாரம்பரியத்தில் ஒட்டிக்கொண்டது. எந்தவொரு புதுமைக்கும் இது வழி வகுக்கவில்லை. மேலும், இது செலவுச் சுமைகளை சேர்த்தது.

மேலும் சில ஆய்வாளர்களின் கூற்றுப்படி, JLR இன் மிகப் பெரிய தவறு, தங்களுடைய சொந்த அளவிலான என்ஜின்களையும் உருவாக்கியது. அவர்கள் Ford-ல் இருந்து பழையவற்றைத் புறம் தள்ளிவிட்டு புதிய பாதையில் சென்றனர். இயல்பாகவே, அவர்கள் இதற்காக நிறைய பணம் செலவழித்திருப்பார்கள் என்று நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம்.

நெருக்கடியில் இருந்து மீண்டது எப்படி?

JLR கடுமையாக ஏதாவது செய்ய வேண்டியிருந்தது. ஒரு வழியாக, கதறிக் கொண்டிருந்த வாகன நிபுணர்களின் ஆலோசனையைப் பின்பற்றியது போல் தெரிகிறது — TRIM THE FAT!

முன்னதாக, JLR இன் ‘முக்கிய கவனம்’ விற்பனையாக இருந்தது. அவர்கள் மேற்கொண்ட அனைத்து விரிவாக்கமும் ஆண்டுக்கு 1 மில்லியன் கார்களை விற்க வேண்டும் என்பதற்காகத்தான்!

ஆனால் அது ஒரு மோசமான இலக்கு என்பதை அவர்கள் உணர்ந்தனர்.

எனவே, நிர்வாகம் அதை கைவிட்டு எதிர் திசையில் சென்றது. JLR குறைவான கார்களை உருவாக்கி அதிக விலைக்கு விற்பனை செய்தார்கள். ஆனால் உங்களால் நினைத்தபோல் விலையை உயர்த்த முடியாது, இல்லையா?

உலகில் அனைத்துப் பொருளாதாரச் சண்டைகளும் அங்கங்கே நடந்த போதிலும், பணக்காரர்கள் நாளை இல்லை என்பது போல் தொடர்ந்து உல்லாசமாக இருப்பதை நாம் அறிவோம். எனவே JLR ஆடம்பரச் சந்தைக்கு ஏற்ற Range Rover, Defender போன்ற கார்களை இரட்டிப்பாக்க முடிவு செய்தது. உண்மையில் இதன் மூலம் JLR அதிக பணம் சம்பாதித்தது.

இதனுடன், விலை குறைவான Range Rover Evoque, Discovery Sport series போன்ற அனைத்து தொடர்களையும் ஒத்திவைக்க வைக்க முடிவு செய்தனர்.

இறுதி முடிவு?

சராசரி விற்பனை விலை (ASP) அநேகமாக அவர்களின் ‘முக்கியமான ஒரு மெட்ரிக்’ ஆக மாறியது. இது சுமார் 50,000 பவுண்டுகளில் இருந்து 72,000 பவுண்டுகளாக உயர்ந்துள்ளது.

FY18 இல் அதன் உச்சபட்சமான 600,000 யூனிட்களுடன் ஒப்பிடுகையில், JLR குறைவான கார்களை விற்பனை செய்கிறது, இப்போது வருடத்திற்கு 400,000 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகிறது. ஆனால், அதன் வருவாய் மிகவும் வலுவானது மற்றும் லாப வரம்புகளும் அதிகம்.

இந்த எளிய வணிக நுண்ணறிவு தான், JLRஐ மீண்டும் சரியான வளர்ச்சிப் பாதையில் கொண்டு வர உதவுகிறது.

ஆனால் இந்தியாவின் பங்குச் சந்தையில் டாடா மோட்டார்ஸ் தனது இடத்தை மிகவும் மதிப்புமிக்க ஆட்டோமொபைல் நிறுவனமாகத் தக்கவைக்க இது போதுமானதா என்பதை காலம் மட்டுமே சொல்லும்.

நன்றி!!!

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours